மும்பை:
மோடி ஆட்சியில் வழங்கப்படும் முத்ரா கடனை வைத்து, பக்கோடா கடை போடலாமே தவிர வேறொன்றும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.மகாராஷ்ட்டிர மாநிலம் தானே-யில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.‘தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி, அரசின் செலவுகள் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கான நான்கு தூண்கள்; மேலும், இவை நான்கும் ஒரு காரின் நான்கு சக்கரங்கள் போன்றவை’ என்று குறிப்பிட்டிருக்கும் ப. சிதம்பரம், ‘ஒன்றிரண்டு சக்கரங்கள் பஞ்சர் ஆகிவிட்டாலே வளர்ச்சியின் வேகம் குறையும்; ஆனால் நமக்கோ மூன்று சக்கரங்கள் பஞ்சர் ஆகிவிட்டன’ என்று தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் திட்டத்திலும், வேறு சிற்சில விஷயங்களில் மட்டுமே அரசு செலவிடுவதாக கூறியிருக்கும் அவர், ஆனால், அதற்கும் பெட்ரோல், டீசல் மற்றும் திரவ பெட்ரோலிய வாயு (டுஞழு) மீது அரசு தொடர்ந்து வரி விதித்து மக்களை வஞ்சித்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
மின்சக்தித் துறையில் அண்மையில் ஏதேனும் முதலீட்டை நீங்கள் கண்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள ப. சிதம்பரம், மோடி அரசு வழங்கும் முத்ரா கடன் மதிப்பான 43 ஆயிரம் ரூபாயில் பக்கோடா கடையைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றும் சாடியுள்ளளார்.மற்ற நாடுகளில் ஜிஎஸ்டி என்பது ஒரேயொரு வரி விகிதாச்சாரம் கொண்ட முறை; ஆனால் இந்தியாவில் நாம் இரண்டு வகையான வரி விதிப்பு முறையை வைத்துக்கொள்ளலாம்; ஆனால், பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 5 விகிதங்களுடன் செஸ் வரியையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது; இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.