தீக்கதிர்

பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது ஆசிட் வீச்சு

சண்டிகர்,

சண்டிகாரில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிமன்றத்திற்கு சென்ற போது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சண்டிகாரை சேர்ந்த இளம்பெண் ஜம்முவை சேர்ந்த இளைஞருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பெண் 2016-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக இளம்பெண் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக சென்ற இளம்பெண் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் ஆசிட்டை வீசி உள்ளனர். அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவர் ஆசிட்டை வீசினர் என பாதிக்கப்பட்ட பெண் கூறி உள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.