புதுதில்லி :

மருத்துவ படிப்புக்காக தேசிய அளவில் நடத்தப்படும் தகுதித்தேர்வு கடந்த மே 6ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதிய இந்த தகுதித்தேர்வில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி 99.99 சதவிகித மதிப்பெண்ணுடன் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும், அவர் இயற்பியலில் 180க்கு 171 மதிப்பெண்களையும், வேதியலில் 180க்கு 160 மதிப்பெண்களையும் மற்றும் உயிரியலில் 360க்கு 360 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.

தேர்வு முடிவுகள் சிபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ படிப்பிற்கான மாணவ சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி தொடர்பான அறிவிப்புகள் நாளை வெளியாகும் எனவும், இம்மாத 4வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: