திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் சிக்கனூத்து கிராமத்தில் பொதுவுடமைச்சிற்பி காரல்மார்க்ஸ் 200ஆவது ஆண்டு விழா மற்றும் 100 குடும்பங்கள் செங்கொடி இயக்கத்தில் இணையும் விழா விமரிசையாக நடைபெற்றது.

ஞாயிறன்று மாலை நடைபெற்ற இந்த விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். முருகன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்கத்தில் இணைந்தோரை செந்துண்டு அணிவித்து வரவேற்றதுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். ரல்மார்க்சின் பொதுவுடமை தத்துவம், தொழிலாளி வர்க்க ஒற்றுமை குறித்து விளக்கப்பட்டது. மேலும்,100 நாள் வேலைத் திட்ட குளறுபடிகளை நீக்கி அவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெ.ரங்கநாதன், கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள் லட்சுமணசாமி, மோகனசுந்தரம், ஓம்பிரகாஷ், சுந்தர்ராஜ், தங்கவடிவேல், சிரீதர் உள்ளிட்டோர் பேசினர்.இதில் இயக்கத்தில் இணைந்த குடும்பத்தார் மட்டுமின்றி ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் ராஜீ நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.