ஈரோடு,
காவல்துறையின் தொந்தரவுகள் தாங்க முடியாததால், தங்களை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்னவலசு பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ஓவியா, அனு. இவர்கள் இருவரும் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் மற்றும் தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, பாலியல் தொழில் செய்வதாக கூறி காவல்துறையினர் எங்களை தொந்தரவு செய்கின்றனர். திருடுவதாக கூறி மிரட்டுகின்றனர். இவ்வாறு செய்யாத குற்றத்திற்காக வழக்குகளை போட்டு வருகின்றனர். இதனால் சுதந்திரமாக வாழ முடியாத நிலையும், ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்தும் வாழ வேண்டிய சூழலும் உள்ளது. எனவே எங்களை கருணைக்கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருநங்கைகள் புகார் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: