கோவை,
எல்.ஜி.பி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையிடக்கோரி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

கோவை வையம்பாளையத்தில் எல்.ஜி.பி என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி 131 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் 11 பேரை உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது. மேலும், 20 தொழிலாளர்கள் மீது பொய் புகார் பதிந்து அதில் 7 பேரை சிறையிலடைத்துள்ளனர். எல்.ஜி.பி நிறுவனத்தின் இந்த தொழிலாளர் விரோத போக்கு மற்றும் காவல்துறையின் அராஜக செயல்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்நிறுவன தொழிலாளர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: