தீக்கதிர்

அமேசானுக்கு சொந்தமான விநியோக நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கைக்கு செல்லும் வர்த்தக சங்கம்

லண்டனில் உள்ள தேசிய பொது மற்றும் நகராட்சி ஊழியர் சங்கம் சங்கம் அமேசானின் விநியோக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லப்போவதாக இன்று அறிவித்துள்ளது. இந்த முடிவு பிரிட்டனில் நடந்த இந்த சங்கத்தின் 101வது வருடாந்திர மாநாட்டில் அச்சங்கத்தின் பொதுச்செயளாலர் டிம் ரோச்சே அறிவித்துள்ளார்.

பொருள்களை விநியோகம் செய்பவர்களை சுயதொழிலாளர் என்ற பெயரில் பதிவு செய்துள்ள அமேசான் நிறுவனம் அந்த தொழிலாளரிகளளின்  வேலை நேரத்தை அந்நிறுவனமே தீர்மானிக்கிறது. போலியாக சுயதொழிலாளர்கள் என்ற பெயரில் அவர்களின் உரிமைகளை மதிக்காமல் சொந்த ஊழியர்களை விட மோசமான வேலை நேரத்தை அதிகப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டுனர்கள் இருவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஜிஎம்பி சங்கத்தின் பொதுச்செயலாளர் கூறுகையில், அமேசான் ஒரு சர்வதேச கம்பெனி. ஒவ்வொரு வருடமும் பல கோடி வருமானம் ஈட்டும் நிறுவனம் அதை சம்பாதித்து தரும் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளை கூட தருவது இல்லை.

கொரியர்கள், பார்சல்கள் போன்றவற்றை விநியோகம் செய்யும் பணிகளில் அளவுக்கு அதிகமான இலக்குகளை நிர்ணையித்து கொடுக்கின்ற குறைந்தபட்ச சம்பளத்தையும் திரும்ப பெறும் அவலங்களை அரங்கேற்றுகின்றனர் என குற்றஞ்சாட்டினார்.