சீர்காழி,
கொள்ளிடம் ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிவன் சிலை கொள்ளிடம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையைச் சேர்ந்த மீனவர்களான புஷ்பராஜ் (55), குமார் (30) ஆகிய இருவரும் கொள்ளிடம் ஆற்றில் சோதனைச் சாவடி அருகே வெள்ளியன்று மாலை படகிலிருந்து வலையை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் பெரிய மீன் சிக்கியது போன்று இருந்தது. உடனடியாக வலையை எடுத்து கரைக்கு வந்து பார்த்தபோது வலைக்குள் முக்காலடி உயரமும் நான்கு கிலோ எடையும் கொண்ட ஐம்பொன்னால் ஆன சிவன் சிலை ஒன்று சிக்கி இருந்தது.

மீனவர்கள் உடனடியாக இந்த சிலையை கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சிலை கொள்ளிடம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: