புதுச்சேரி,
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள ரொசாரியோ வீதியில் சரவண பாபு வசித்து வருகிறார். புதுச்சேரியை அடுத்தகூணிமேடு பகுதியில் இறால்பண்ணை அமைத்து தொழில் நடத்தி வருகிறார். மதுரையைப் பூர்வீகமாக கொண்ட அவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இங்குவந்துள்ளார். புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் ஒரு பங்களா கட்டியுள்ளார். முத்தியால்பேட்டை பகுதிக்கு கடந்த ஒரு ஆண்டுக்குமுன்பு குடி வந்தார்.

வாரந்தோறும் வெள்ளியன்று கோட்டக்குப்பம் பங்களாவுக்கு குடும்பத்துடன் சென்று ஞாயிறு காலைவீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில்கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோட்டக்குப்பம் பங்களா வீட்டிற்கு சென்றிருந்தார். ஞாயிறன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 300 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி சாமான்கள் திருடு போனது தெரியவந்தது. இதனை அடுத்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தினருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் அளித்த நிலையில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வீட்டைச் சுற்றி சிசிடிவி:
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் கொண்டகருவியையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அருகிலுள்ள வீடுகளில் பதிவான சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதிகமான குடியிருப்புப் பகுதிகள்இருக்கக்கூடிய இப்பகுதியில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. தொடரும் திருட்டுபுதுச்சேரியில் கடந்த ஒருமாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில்
திருட்டுகள் நடந்து ஏராளமான நகைகள், ரொக்கம் திருடு போயுள்ளது. இதுவரை ஒரு சம்பவத்தில் ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்யவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.