திருப்பூர்,
திருப்பூரில் பள்ளிகள் துவங்கியதையடுத்து சீருடைகள் வாங்க கூட்டம் அலைமோதியதால் சீருடை விற்பனை கலைகட்டிஉள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1ம் தேதி முதல் துவங்கியது. புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்கள் மற்றும் அடுத்த வகுப்புக்கு சென்ற தங்கள் குழந்தைகளுக்கும் புது சீருடைகளை வாங்க பெற்றோர்கள் வந்தனர். குறிப்பாக ஞாயிறு விடுமுறை தினத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு சீருடைகள் வாங்க குழந்தைகளுடன் துணிகடைகளில் குவிந்தனர். இதனால் துணிகடைகள் நிறைந்த கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது. பள்ளி திறக்கப்பட்டு விட்ட நிலையில் சீருடைகள் மாறிவிட்ட காரணத்தால் ரெடிமேட் ஆடைகளை வாங்க பெற்றோர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இதில் எதிர்பார்த்த ரெடிமேட் சீருடைகள் கிடைக்கமால் பல கடைகளுக்கு அலைய வேண்டிய சூழலும் ஏற்பட்டது. சிலருக்கு அதிக அலைச்சல் இன்றி எளிதில் புது சீருடைகளை வாங்கியதால் மகிழ்ச்சியுடன் சென்றதையும் காணமுடிந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.