கோவை,
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான குடிமைப்பணிகள் முதல் நிலைத்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிகரன் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்தாவது, இத்தேர்வு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் மிகுந்த கவனத்துடனும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும். கோவையில் எஸ்ஆர்பி அம்மனியம்மாள் மகளிர் மாநகராட்சி மேனிலைப்பள்ளி, சித்தாபுதூர், ஆர்எஸ் புரம், வடகோவை ஆகிய இடங்களிலுள்ள மாநகராட்சி மேனிலைப்பள்ளிகளிலும், நிர்மலா மகளிர் கல்லூரி உள்ளிட்ட 20 தேர்வு மையங்களில் மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.இத்தேர்விற்கு கோவை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 787 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 3 ஆயிரத்து 882 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். 4 ஆயிரத்து 905 தேர்வர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை நடத்த ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தலா ஒரு தேர்வு மைய கண்காணிப்பாளர், 3 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்கள், 1 ஆய்வு அலுவலர் மற்றும் ஒரு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணயத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு அலுவலர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிகரன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: