கோவை,
காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கபட்டுவிட்டதாகவும், எதிர்காலத்தில் இவ்விவகாரத்தில் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு காவிரி வழக்கை மீண்
டும் விசாரிக்க வேண்டும் என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளர்.

கோவை விமான நிலையத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவைக் கண்ணை இமைகள் காத்தும், எண்ணற்ற இலக்கியங்களை சாக வரம்பெற்ற கருவூலங்களாக மாற்றியத் தலைவர் கலைஞருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியத்தை அரசிதழில் வெளியிட்டதை முதல்வரும், அமைச்சர்களும் வெற்றி என்று சொல்கிறார்கள். ஆனால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம். நடுவர் மன்ற தீர்ப்புக்கு மாறாக அணைகள் பாதுகாப்பு, தண்ணீர் திறப்பதை வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய தொழிற் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் அகற்றபட்டுவிட்டன. தீர்ப்பை முழுமையாக படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வு நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டு.

தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்து தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பைக் மாற்றி விட்டார்கள். இதற்கு தீர்வு எதிர்காலத்தில் வேண்டுமென்றால் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் மேகதாதுகுறுக்கே அணைகள் கட்டுவதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது. எதிர்காலத்தில் காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றால் டெல்டா பகுதிகள் எல்லாம் பாலைவனமாக மாறி, விவசாயிகள் நிலத்தைக் விற்று அதைக் கார்ப்ரேட் கம்பெனிகள் வாங்கி, எரிவாயு உள்ளிட்ட பல கேடுவிளைவிக்கின்ற திட்டங்களை எல்லாம் தமிழகத்திற்கு ண்டு வருவார்கள். பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வரட்டும்.அதன் மூலம் தொழில் வளம் பெருகட்டும் அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய அரசு பல கேடு விளைவிக்கின்ற திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை பாலைவன
மாக மாற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.