வட மாநிலங்களில் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நடப்புப் பருவத்தில் கடுமையான விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால் கடந்த இரு நாட்களாகக் காய்கறிகளை சாலைகளில் கொட்டி போராட்ட த்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சந்தைக்குக் காய்கறிகள் விநியோகத்தை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் தில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் முக்கிய சில நகரங்களில் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பல நகரங்களில் பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் சந்தையில் சில்லறை விற்பனை விலை உயர்வைக் கண்டு வருகிறது.

சண்டிகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு 10 முதல் 15 ரூபாயாக இருந்த தக்காளி விலை, தற்போது 20 முதல் 25 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி உருளைக்கிழங்கு, சிகப்பு மிளகாய், சுரைக் காய், வெள்ளரி ஆகியவையும் வரத்து குறைந்து விலையுயர்வைக் கண்டு வருகிறது.  இந்நிலையில் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. உற்பத்திக்கான நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்பதும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது. மகாராஷ்டிராவில் 50,000 விவசாயிகளை இணைத்து மிகப்பெரிய பேரணியை நடத்திய அகில இந்திய விவசாயிகள் சங்கம் இந்தப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், ஊடக விளம்பரங் களுக்காகத் தான் விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர் என்று வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் சற்றும் பொறுப்பின்றி கூறியிருப்பது, விவசாயிகளை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. இது ஒரு புறம் இருக்க, நடப்பு குறுவைப் பருவத்தில் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவான அளவிலேயே பயிர்கள் விதைக்கப்பட் டுள்ளன. இதனால் இந்த ஆண்டுக்கான பயிர் உற்பத்தியும் சரியும் என்று தகவல்கள் கூறு கின்றன.இந்தியாவில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான பயிர் காலம் குறுவைப் பருவம் என்று அழைக்கப்படுகிறது. இப்பருவ காலத்தில் அரிசி, கம்பு, சோயாபீன், பருத்தி, மஞ்சள், கரும்பு,நிலக்கடலை, பாகற்காய், உளுத்தம் பருப்பு, மக்காச்சோளம், சோளம், ஆளி விதை, பச்சைப் பயிறு, எள் போன்ற பயிர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும். ஆனால், இந்த ஆண்டில் போதிய மழைப் பொழிவு இல்லாததால் பயிர் விதைப்புப் பரப்பு சென்ற ஆண்டு அளவை விடக் குறைவாக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சகம் ஜூன் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

நெல் உற்பத்திப் பரப்பும் 5.2 லட்சம் ஹெக்டேரிலிருந்து 2.95 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் போன்றவையும் இந்த ஆண்டில் குறைவான அளவிலேயே விதைக்கப்பட்டுள்ள தாக வேளாண் அமைச்சகம் கூறுகிறது. விளைவு என்னாகும்? அப்போதும் விலை உயரும். ஆக விவசாயிகளுக்கும் லாபமில்லை; நுகர்வோருக்கும் லாபமில்லை. யார் காரணம்? மோடி அரசு என்ன செய்கிறது? அது, தனது நான்காண்டு சாதனைகளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.