சூப்பர் பதிவு
=========
சாதாரண கடன்காரர்களிடமிருந்து அரை நாள் கூட தப்பிக்க முடியல. எப்படியோ மோப்பம் பிடிச்சி வந்து அமுக்கிடறாங்க….
ஆனா பாருங்க… ‘ஸ்காட்லாந்து யார்டு’-க்கு ஈக்குவலான (?) தமிழ்நாடு போலீஸ் தேடோ,தேடுன்னு தேடியும்….ஒன்றரை மாசத்துக்கும் மேலாக பிடிபடாமல் டேக்கா கொடுத்திட்டு வர்றாரே…நிச்சயமா எஸ்.வி சேகர் பலே கில்லாடிதான்!
பதுங்குவதில்…செத்துப்போன வீரப்பன், ஒசாமா, உயிரோடிருக்கும் தாவூத் இப்ராகிம் இவங்களெல்லாம் இந்த ‘புளியோதரை போராளி’யிடம் பிச்சை வாங்கணும்.
ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி காட்டியும் உயிரோட பிடிக்க முடியவில்லை என்றால்…
வழியே இல்லை…வேற வழியேயில்லை மிஸ்டர் எடப்பாடி…
மயிலாப்பூர் டெபுடி தாசில்தாரை அலர்ட் பண்ணி சுட்டுப்பிடிக்கச் சொல்லுங்க!

-Mani Maran

Leave a Reply

You must be logged in to post a comment.