16-வது உலக கோப்பை கால்பந்து தொடர் 1998-ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்றது.மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற,இந்த தொடரில் புதிய விதிமுறை ஒன்றை பிபா அறிமுகப்படுத்தியது.கூடுதல் நேரத்தில் முதலில் கோல் அடிக்கும் அணி வெற்றி பெறும் என்ற ‘கோல்டன் கோல்’ விதிமுறை அறிமுகமானது.

இந்த தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, இத்தாலிக்கு (‘பெனால்டி ஷூட் வுட்’ முறையில் 4-3 என்ற கோல் கணக்கில்) செக் வைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.மற்றொரு காலிறுதியில் அதிகம் எதிர்பார்த்த ஜெர்மனி அணிக்கு கத்துக்குட்டி அணியான குரோஷியா அதிர்ச்சி அளித்தது.இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரேசில்-பிரான்ஸ் அணிகள் மோதின. ஜினடின் ஜிடேனின் மந்திர ஆட்டம் பிரான்ஸ் அணிக்கு கைகொடுத்தது.ஜினடின் ஜிடேன் தலையால் முட்டி இரு கோல்கள் அடிக்க, பிரான்ஸ் அணி 3-0 என வென்றது.இதன்மூலம் சொந்த மண்ணில் கோப்பை வென்று,புதிய வரலாறு படைத்தது.

இத்தொடரில் குரோஷியாவின் டேவர் சூகர் 6 கோல் அடித்து தங்கக் காலணி விருதை வென்றார்.பிரேசில் வீரர் ரொனால்டோ தங்கப் பந்து விருதை தட்டிச் சென்றார்.

Leave A Reply

%d bloggers like this: