சிதம்பரம்,
சிதம்பரம் அருகே குட்டியானை என்ற அழைக்கப்படும் வேன் கவிழ்ந்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு அருகே உள்ளது சேந்திரகிள்ளை என்ற கிராமம். இங்கிருந்து இன்று சிதம்பரம் அருகே உள்ள அகரநல்லூர் கிராமத்திற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் 16 பெண்கள் உட்பட 22 க்கும் மேற்பட்டோர் வேனில் வேலைக்கு சென்றுள்ளனர்.   வேன் சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சென்றுகொண்டு இருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில்  சம்பவத்திடத்திலேயே விவசாய கூலித்தொழிலாளி  காசியம்மாள்(55)  என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுதா(52) என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் 16 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து விபத்தில் சிக்கியவர்களிடம் கேட்ட போது, காலை நேரத்தில் எங்கள் கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து வசதி மிகவும் குறைவாகவே இருக்கிறது. அன்றாடம் நேரத்திற்கு வேலைக்கு செல்லாவிட்டால் கஞ்சிக்கே வழியில்லாத நிலை ஏற்படும். அதனால் நாங்கள் கிடைக்கும் தனியார் வேன்களில் ஏறி வேலைக்கு சென்று வருகிறேராம். சேந்திரகிள்ளை பகுதியில் இருந்து அகரநல்லூருக்கு சென்றுவர ஒரு நபருக்கு பேருந்து கட்டணம் ரூ 50 ஆகிறது. எங்களுக்கு கிடைக்கும் கூலியே ரூ200 தான். அதனால்தான் நாங்க இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு குட்டியானையை ரூ 400 வாடகைக்கு அமர்த்தி கொண்டு பயணம் செய்தோம். இப்படி கவிழ்ந்து விபத்துகுள்ளாகி உயிரை மாய்த்துகொள்ளோம் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அரும்பு என்கிற கூலி பெண் தொழிலாளி இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: