அண்மையில் மோடிஜி சிங்கப்பூர் போயிருந்த போது நாயாங்க் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நேரலையில் நேர் காணல் நிகழ்ச்சி நடந்தது..

“ஆசியாவின் பிரச்சனைகள்”பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது..

மோடிஜி யும் தட்டுத்தடங்கல் இல்லாமல் சரளமாக இந்தியில் பதில் சொன்னார்.

ஆனால் அவர் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெர்த்த மொழிபெயர்ப்பாளர் கையில் இருந்த பேப்பரில் நோட்ஸ் எடுத்துக் கொண்டு மொழிபெயர்த்தார்.

ஆனால் மோடி தன் பதிலில் சொல்லாத நிறைய புள்ளி விபரங்களை மொழிபெயர்ப்பாளர் சொன்னார்.

பேச்சை விட மொழிபெயர்ப்பு வெகுநீளமாகவும் மோடிஜி சொல்லாத விஷயங்களை விட அதிகமான தகவல்கள் கொண்டதாகவும் இருந்தது..

கேள்வியும் பதிலும் முன் கூட்டியே எழுதி வைத்துக் கொண்டு ஷோ நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்து கூச்சலிடத் தொடங்கி விட்டார்களாம்..

அதற்கு முந்தைய வாரம் லண்டனில் நடந்த நேரலை நேர்முக நிகழ்ச்சியிலும் இதே போன்ற கூத்து நடந்ததாம்..

Leave A Reply

%d bloggers like this: