நாகப்பட்டினம்:
2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் முற்றிலும் அழிக்கப்பட்டது மீனவ கிராமமான கீச்சாங்குப்பம். அப்படி அழிக்கப்பட்டதில் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் ஒன்று. பள்ளி மட்டுமல்ல, இப்பள்ளியின் 70 க்கு மேற்பட்ட மாணவ – மாணவியரும் சுனாமியில் பலியாயினர். அதன் பிறகு, புனரமைக் கப்பட்ட இந்தப் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. கடற்கரையோரம் இப்பள்ளி இருப்பதால், மீண்டும் சுனாமி ஏற்பட்டால், பிள்ளைகள் மாண்டு போவார்களே என்று பெற்றோர்கள் அஞ்சி, மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்து வந்தனர்.

இந்நிலையில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இரா.பாலு மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர்களிடம் நம்பிக்கை ஊட்டி, வீடு வீடாகச் சென்று, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்திட கோரினர்.அதன்பிறகு, மீனவப் பஞ்சாயத்தார், பொது மக்கள், கல்வித் துறையினர் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவினர். ஊர்மக்கள் ஒன்று கூடி, 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சம் செலவீட்டில் இப்பள்ளியை அனைத்து வசதிகளும் நிறைந்த ‘ஸ்மார்ட்’ பள்ளியாக மாற்றினர். ஆரம்பத்தில் 100-க்கும் குறைவாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது.

தற்போது, இந்தப் பள்ளி, காமராஜர் விருது, தேசிய அளவிலான புரஸ்கார் விருது, சர்வதேச அளவில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று, எனப் பல பெருமைகளைப் பெற்றுள்ளது. கல்வியாண்டில் பள்ளி தொடங்கியதும், இவ்வூர் மீனவ மக்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் ஒன்று கூடி, பள்ளிக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து மேளதாளத்தோடு ஊர்வலமாகப் பள்ளிக்குக் கொண்டு வருவார்கள்.

தற்போது, வெவ்வேறு பள்ளி களில் சேர்ந்த மாணவர்களைப் பெற்றோர்களே இப்பள்ளியில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். பள்ளி திறந்த ( ஜூன் 1) அன்றே புதிதாக 96 மாணவ -மாணவியர் சேர்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது கீச்சாங் குப்பம் பள்ளி. இன்னும் புதிய மாணவர்க ளின் எண்ணிக்கை 200 ஆக உயரும் என்று இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு நம்பிக்கையோடு கூறுகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.