உலகச் சாம்பியனாக இருந்தாலும் சரி,நடப்பு சாம்பியனாக இருந்தாலும் சரி எதையும் கண்டுகொள்ளாதது போல எந்தவித பதட்டம் இல்லாமல் விளையாடும் அணி பெரு.கால்பந்து உலகில் கத்துக்குட்டி இருந்தாலும் பெரு அணியை பார்த்து பல முன்னணி அணிகள் ஜாக்கிரதையாகதான் களமிறங்கும்.

அந்தளவுக்கு பெரு அணியை மிகவும் கட்டுக்கோப்பாக வழிநடத்திவரும் கேப்டன் பவுலோ கியூரெரோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜெண்டினாவிற்கு எதிரான ஆட்டத்தின் போது போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டடு சுவிட்சர்லாந்து பெடரல் நீதிமன்றம் 6 மாதம் தடைவிதித்தது. பவுலோ கியூரெரோவின் தண்டனை காலம் ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடைதாக இருந்த நிலையில்,உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து பெடரல் நீதிமன்றத்தில் பவுலோ கியூரெரோ மேல்முறையீடு செய்தார்.மேல்முறையீட்டில் அவரது தண்டனை 14 மாதமாக அதிகரிக்கப்பட்டது.இதனால் உலகக் கோப்பையைில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மனம் தளராத பவுலோ கியூரெரோ விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் 2-வது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.இதனால் ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் விளையாட பவுலோ கியூரெரோ தகுதிப் பெற்றார்.பெரு அணியில் பேசும் அளவிற்கு நட்சத்திர வீரர்கள் கிடையாது.பவுலோ கியூரெரோவின் சிறப்பான அணுகுமுறையால் மட்டுமே மற்ற வீரர்கள் மைதானத்தில் சுழலுவர்கள். குரூப் “சி” பிரிவில் இடம்பெற்றுள்ள பெரு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் (ஜூன் 16-ஆம் தேதி) டென்மார்க் அணியை எதிர்கொள்கிறது.

Leave A Reply

%d bloggers like this: