திருவாரூர்:
பன்முக திறமைபடைத்த ஆளுமையாலும் அயராத உழைப்பாலும் உச்சத்தை தொட்டதோடு தேசியத் தலைவராக உயர்ந்தவர் கலைஞர் கருணாநிதி என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். வெள்ளிக்கிழமையன்று (ஜுன்1) திருவாரூரில் நடைபெற்ற கலைஞர்-95 என்ற தலைப்பில் நடைபெற்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா வாழ்த்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார்.விழாவில் அவர் பேசியதாவது:
கலைஞர் ஒரு ஓய்வில்லாத உழைப்பாளி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் மறைந்த தோழர் சுர்ஜித் போன்றவர் களோடு இணைந்து தேசிய அளவில் பணியாற்றிய பெருமைக்குரியவர். இவரது சாதனை என்பது எளிதாக நடந்துவிடவில்லை. ஓரளவிற்கு படித்தவர். பெரிய செல்வந்தர் வீட்டு மகனில்லை ஆழமான பின்னணி ஏதுவும்
கிடையாது. ஒரு சாமானியரான கலைஞர் இந்த அளவிற்கு உயர்ந்தார் என்பது அவரது இடையறாத உழைப்பினாலும் அனுபவக் கல்வியினாலும் ஏற்பட்டது.

மாநில உரிமைகள்
தமிழை, தமிழகத்தை, மாநில உரிமைகளை காப்பதற்காக போர்க்குணத்தோடு பணி யாற்றியவர். தலைசிறந்த நிர்வாகி பேச்சாற்றல் எழுத்தாற்றல் போன்ற திறமைகளை கொண்ட
வர். அவரைப் பொறுத்தவரை ஆட்சி மட்டுமே எப்போதும் பொருட்டாக இருந்ததில்லை. எங்களைப் போன்றவர்கள் அவரோடு இணைந்தும் எதிர்த்தும் அரசியலில் பணியாற்றி யிருக்கிறோம். கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறோம். இருந்தபோதிலும் அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு மனிதநேயப் பண்போடு அரசியல் நாகரிகத்தோடு தோழமை பாராட்டியவர்.

அவசர நிலை – ஆட்சியிழப்பு
1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தி இந்தியாவில் அவசர நிலையை அறிவித்தபோது அத னை ஏற்க மறுத்து உரிமைக்குரல் எழுப்பியவர் கலைஞர். சட்டமன்றத்தில் அவசரநிலை பிர
கடனத்திற்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தவர். இந்தியா முழுவதும் ஆட்சி செய்துவந்த எதிர்க்கட்சியினருக்கு உத்வேகம் அளித்தவர். மிசா கொடுமைகளை தைரியமாக எதிர்கொண்டவர். இதன் காரணமாகவே இவரது ஆட்சி இந்திராகாந்தியால் கலைக்கப்பட்டது என்பது வரலாறு. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மாநில சுயாட்சியை வலுப்படுத்த சமரச மில்லாமல் போராடியவர். மறைந்த தலைவர் ஜோதிபாசு போன்றவர்களோடு இணைந்து அரசியல் பணியாற்றியவர்.

மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது. சாதியபாகுபாடு இருக்கக் கூடாது. ஏழை எளிய உழவர்களுக்கு நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற கொள்கைக்காக தனது ஆட்சிகாலத்தில் பல  முடிவுகளை எடுத்தவர். அவர் முதன் முதலாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபோது அப்பகுதி யில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனை களுக்காக குரல்கொடுத்ததோடு விவசாயி களோடு இணைந்து வயல்வெளியில் இறங்கி ஏர்பிடித்து உழுது போராட்டம் நடத்தியவர். சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டவர்.

பாஜக – அதிமுக அரசு
இன்றைக்கு மிகமோசமான சூழ்நிலையில் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கின்ற அரசு செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய
நாட்டை காவிமயமாக்க முயற்சித்து வருகிறது. இந்தியாவின் புகழ்மிக்க பன்முகத் தன்மையை சீர்குலைத்து மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் சிதைத்து ஒரேநாடு ஒரேமொழி என மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இத்தகைய அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நாம் நடத்தவேண்டியிருக்கிறது. மாநில கைப்பாவை அரசைப் பொறுத்தவரை சமீபத்தில் தூத்துக்குடியிலே துப்பாக்கி சூட்டை நடத்தி நம்சொந்தமக்களின் உயிரையே குடித்திருக்கிறது. நாளை காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஷெல்கேஸ் எடுக்கும்
திட்டங்களை எதிர்த்தும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு எதிராக நாம் போராடுகிற போது இங்கேயும் துப்பாக்கி சூடு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? எனவே மோடி
அரசுக்கு சாவுமணி அடிக்கவும் எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டவும் நம்முடைய எழுச்சிப் பயணத்தை தொடர வேண்டியிருக்கிறது.

அண்மையில் கச்சநத்தம் கிராமத்தில் சாதிய  பாகுபாடு காரணமாக மூன்று உயிர்கள் பறிக்கப்
பட்டுள்ளது. பெரியார் பிறந்த மண்ணில் இந்த நிலை இன்றும் நீடிக்கிறது. சாதி வேறுபாடுகள் அதிகரித்துவருகிறது. எனவே “காவியில்லா இந்தியா சாதியில்லா தமிழகம்” என்ற முழக்
கத்தை முன்வைத்து உத்வேகத்துடன் போராடு வதற்கு இந்தவிழா வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக்கொண்டு 95-வயதை எட்டியுள்ள மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் மனதார வாழ்த்து கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்த்தரங்கம்
இந்த வாழ்த்தரங்கத்திற்கு திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை யேற்றார். முதன்மைசெயலாளர் துரைமுரு கன் வரவேற்றுப் பேசினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நிறைவுரை யாற்றினார். திமுக மாவட்டச் செயலாளர் கே.கலைவாணன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.