லக்னோ:
உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையே சீதைதான் என்று, உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா அடுத்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார்.மகாபாரதக் காலத்திலேயே ஊடகத்துறை துவங்கி விட்டது; டி.வி. லைவ் ஷோ போல, நேரடி ஒளிபரப்பும் இருந்தது என்று நாரதர்தான் அந்தக் காலத்து ரிப்போர்ட்டர் என்றெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு தினேஷ் சர்மா பேசியிருந்தார்.தற்போது முதல் டெஸ்ட் டியூப் பேபி-யே, ராமரின் மனைவிதான் சீதைதான் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

லக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பேசியிருக்கும் தினேஷ் சர்மா, ‘நமது இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகியவை நவீன அறிவியலுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றன; இதிகாச காலங்களில் பயன்படுத்தப்பட்ட புஷ்பக விமானங்களே இப்போதைய விமானங்களுக்கு முன்னோடியாக அமைந்தவை. திருதிராஷ்டிரனுக்கு மகாபாரதப் போரை ஞான திருஷ்டியில் கண்டு விளக்கிய விதமே இன்றைய நேரலை நிகழ்ச்சிக்கான முன்னோடியாகும்; அதேபோல உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதாதேவி-தான் என்பதையும் மறுப்பதற்கு இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.அவரது பேச்சு உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.