சேலம்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட முன்னணி ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளியன்று சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட முன்னணி ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு சேலத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.பரமேஷ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் பெண்களை பாதுகாக்கும் சட்டங்களும், நடைமுறைகளும் போன்ற பல்வேறு தலைப்புகளில் வழக்கறிஞர் தேவி ரமணி, சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி ஆகியோர் கருத்துரையற்றினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: