மந்சாவூர் :

மத்தியப்பிரதேச மாநிலம் மந்சாவூர் மாவட்ட விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் நிறுத்திய 10 நாள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டத்தை அகிம்சையான முறையில் கொண்டு செல்லும் திட்டமாக விவசாய பொருட்களான பால், காய்கறிகள் போன்றவற்றை சந்தைகளுக்கு வழங்குவதை நிறுத்தியுள்ளனர்.

இதேபோன்று கடந்த வருடம் நடத்தப்பட்ட போராட்டத்தில் நான்கு விவசாயிகளை காவல்துறை சுட்டுக் கொன்றது. இதன் எதிர்வினையாக தற்போது இதுபோன்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் வட்டியில்லாக் கடன்களை வாங்கினாலும் விவசாயப் பொருள்களுக்கான விலை இல்லாத நிலையால் அவர்கள் பாதாளத்திற்கே தள்ளப்படுகிறார்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த ”ஒருமுறை செய்யப்படும் கடன் தள்ளுபடி, சிறந்த குறைந்தபட்ச ஆதரவு விலை” என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைக்கிறோம் என போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் கூறுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: