பாவத்தின் சம்பளம்..
“”””””””””””””””””””””””””””””
உ.பி கைரானா தொகுதியில் பாஜக வேட்பாளர் ம்ருகன்கா சிங் எனும் பெண்மணி (பாஜக) இன்று தோற்றுள்ளார். இவர் ஹூகும்சிங் என்கிற பாஜக வின் முன்னாள் MP யின் மகள்.

2016 ல் கைரானா பகுதியில் பெரிய அளவில் அங்குள்ள இந்துக்களை முஸ்லிம்கள் விரட்டி வெளியேற்றுகிறார்கள் என ஒரு demographic change ஐ அரசியலாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான. ஒரு வன்முறையை பாஜக அரங்கேற்றியது.

கலவரத்துக்குச் சற்று முன்னதாக அப்பகுதி DIG ஏ.கே.ராகவ் அரசுக்கு அளித்த அறிக்கை ஒன்றில் பா.ஜ.க பிரமுகரான ஹூகம் சிங் என்பவர், தன் மகள் ம்ரிகன்கா சிங் கை அத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த உள்ளதாகவும், அதை ஒட்டியே ஒரு கலவரத்தைத் தூண்டும் நோக்குடன் இப்படிப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்பதை அரசுக்கு அறிக்கையாக அனுப்பிிஅம்பலப்படுத்தி இருந்தார். ஹுகம் சிங் ஏர்கனவே முசாஃபர் நகர் கலவரத்தில் பங்குபெற்றவர்.

அந்த ம்ருகன்கா சிங் தான் இன்று பாஜகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுப் படு தோல்வி அடைந்தவர்.

மக்கள் இந்த மதவெறி வன்முறை அரசியலை ரசிக்கவில்லை என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

Marx Anthonisamy

Leave a Reply

You must be logged in to post a comment.