பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் (உறுப்பு) கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியில் உறுப்புக் கல்லூரியில் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை அக்கல்லூரியின் முதல்வர் (பொ) கிருஷ்ணராஜ் வெள்ளியன்று வெளியிட்டார். இக்கல்லூரியில் இந்தாண்டு வழங்கப்பட்ட மொத்தம் 967 விண்ணப்ப படிவங்களில், 768 பேர் பூர்த்தி செய்து அலுவலகத்தில் பதிவு செய்திருந்தனர். இதில் பி.ஏ.(ஆங்கிலம்), பி.எஸ்.சி (கணிதம்), பிபிஏ, பி காம்.(சி.ஏ), பி காம்.(பிஏ) உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும், இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டமானது வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி (திங்களன்று) நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு அதாவது மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு திங்களன்று காலை 9.30. மணியிலிருந்து 10.30 வரையும், அதன் பின்னர் 1 லிருந்து 400 வரையிலான விண்ணப்பதாரர்களுக்கு 10.30. மணியிலிருந்து மதியம் 1.30. வரையும், 401 லிருந்து 768 வரை உள்ளவர்களுக்கான கலந்தாய்வு மதியம் 2 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வில் பங்கு பெறும் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மாணவர் சேர்க்கைக்கு தேவையான அனைத்து மூலச்சான்றிதழ்களும் மற்றும் அவற்றின் மூன்று படி நகல்களுடன், உரிய கட்டணத் தொகையுடன் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: