குன்னூர்,
நீலகிரி மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 14 வயது பூர்த்தியடைந்த ஆண் பெண் இருபாலரும் (www.skiltraining.tn.gov.in) என்ற இணையதளத்தில் 27.06.2018 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்களுக்கு உச்சபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. இதன்படி குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிட்டர், டர்னர், கம்பியர் (குளிர்பதனம்) கம்பியர் (மோட்டார் வண்டி) மின்சாரப்பணியாளர், கம்பியாளர், வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள், தச்சர் தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு குன்னூர் தொழிற்பயிற்சி முதல்வரை தொலைபேசி எண் 0423- 2231759, 2233010 ல் தொடர்பு கொள்ளலாம் என குன்னூர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பழங்குடியினருக்காக இயங்கும் கூடலூர் அரசினர் தொழிற்பயிற்சி லையத்தில் பொருத்துநர், கம்பியர், மோட்டார் வண்டிகம்பியாள், வெல்டர், பிளம்பர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

Leave A Reply

%d bloggers like this: