மதுரை,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து வரும் மே 6 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 100 நாட்களாக மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 100 நாளான கடந்த 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சுமார் 20000 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்கும் முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் உறுதியோடு முயன்று சென்றதால் ஆத்திரம் அடைந்த காவல் துறையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 23 ம் தேதி மருத்துவமனையின் முன் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திரண்டனர். அப்போதும் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் காளியப்பன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக டிஜிபி உட்பட தமிழக அரசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் சார்பில் முத்து அமுதநாதன் என்பவர் உயர் நீதிமன்ற  மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த இரண்டு வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்தது. அப்போது தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசு ஓய்வு பெற்ற அதிகாரி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளதாக பதில் அளித்தது.
தமிழக அரசின் பதில் அறிக்கையால் கோபம் அடைந்த நீதிபதி சுட யார் உத்தரவிட்டது என்று கேட்டால் ஓய்வு பெற்ற அதிகாரி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளோம் என்று பதில் அளிக்கிறீர்களே என்றார். இதைத்தொடர்ந்து வரும் துப்பாக்கி சூட்டுக குறித்து விரிவான அறிக்கையை வரும் 6 ஆம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.