புதுதில்லி :

இமாச்சலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவின் புற பகுதியான தேஆக் என்ற இடத்தில் மாநில அரசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இமாச்சலபிரதேச மாநில அரசுப்பேருந்து ஒன்று சிம்லாவிலிருந்து சரோந்தா கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மலைப்பாதையில் இறங்கும்போது நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் 7பேர் பலியாகினர் மற்றும் 21பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடுமையான பாதிப்பு அடைந்தவர்கள் சிம்லாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்துக்கான காரணங்களை போலீசார் விசாரித்து  வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: