பிரேசிலில் நடைபெற்ற கடந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறிய ஸ்பெயின் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 2016 யூரோ கோப்பை போட்டிக்கு பின்பு ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற லெபெடேகி ஸ்பெயின் அணியை தோல்வியே அறியாத அணியாக வழிநடத்தி வந்துள்ளார். இந்த முறை பலரின் கணிப்பும் ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்பதாகவே இருக்கிறது.ஸ்பெயின் அணியின் பின்கள ஆட்டக்காரர்கள் மற்றும் கோல்கீப்பர் டி ஹெயூம் ஆகியோர் அடங்கிய குழு எதிரணியினரின் எந்த வியூகத்தையும் தகர்க்கும் வலிமை வாய்ந்ததாக உள்ளது. ரமோஸ் மற்றும் ஜெரால்டு பிக்வே ஆகியோர் உலகின் தலைசிறந்த நடுகள எதிர்ப்பு ஆட்டக்காரர்கள் ஆவார்கள். மற்றும் கர்ஹவால்,ஆல்பா.இனியெஸ்டா ஆகியோரும் நடுகளத்தில் திறமையை நிரூபிக்கக் கூடியவர்களாவர். இருந்தபோதிலும் ஸ்பெயின் அணியின் குறை என்பது அந்த அணிக்கு துல்லியமான ஒரு தாக்குதல் வீரர் இல்லை என்பதாகும். தாக்குதல் வீரரான அல்வாரோ மொராட்டாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.தியாகோ கோஸ்டா அணியில் இடம்பெற்றுள்ளார் என்ற போதிலும் அவரின் செயல்பாடு எந்த அளவிற்கு பயன் அளிக்கும் என்பது களத்தில் தெரியும்.

காயம் காரணமாக ஸ்பெயின் அணி கடைசியாக விளையாடிய இரண்டு நட்புறவுப் போட்டிகளில் புஸ்க்வெட்ஸ் களமிறங்கவில்லை.அது மட்டுமல்லாமல் இந்த சீசனில் நடைபெற்ற கிளப் ஆட்டங்களிலும் புஸ்க்வெட்ஸ் சரியாக விளையாடவில்லை. ஸ்பெயின் அணியின் மாற்று வீரர்களும் சிறந்த பார்மில் உள்ளவர்களாவார்கள்.
முதல் சுற்று ஆட்டங்களில் யூரோ கோப்பை சாம்பியனான போர்ச்சுக்கல், பெயின் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும். மொராக்கோ, ஈரான் ஆகிய அணிகளை எளிதில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் ஸ்பெயின் அணி களமிறங்கும்.

அணி விபரம்:
கேப்டன் :                      ஜெர்ஜியோ ரமோஸ்.
முக்கிய வீரர்கள்:       டேவில் டெகேயா,ரமோஸ்,ஜெரால்டு பிக்வே,இஸ்கோ,                                                        ஆந்த்ரே இனியெஸ்டா,டேவிட் சில்வா
ஆட்ட முறை:                (4-3-3)

 

15-வது உலகக் கோப்பை;                                                                                                                                                             15-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் 1994-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது.மொத்தம் 24 அணிகள் பங்குபெற்ற இந்தத் தொடரில் ரஷ்யா முதன் முதலாகக் களமிறங்கியது.அதிகம் எதிர்பார்த்த கொலம்பியா அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.அமெரிக்க அணிக்கெதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் கொலம்பியா வீரர் ஆன்ட்ரஸ் எஸ்கோபர் ஓன் கோல் (சேம் சைடு) அடித்தார்.இவரது கோலால் தான் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.கொலம்பியா அணியின் தோல்விக்கு ஆன்ட்ரஸ் எஸ்கோபர் தான் முக்கிய காரணம் என்று கருதிய ரசிகர்கள் மதுபான விடுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.அர்ஜெண்டினாவின் நட்சத்திர நாயகன் டிகோ மாரடோனா ஊக்க மருந்து சோதனையில் தேர்ச்சி பெறாததால் தொடரின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.டிகோ மாரடோனாவின் கால்பந்து வாழ்க்கை இந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.மாரடோனா இல்லாமல் அர்ஜெண்டினா நாக் அவுட் சுற்றில் ருமேனியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது.பிரேசிலும்,இத்தாலியும் மோதிய இறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களுக்கும் கோலடிக்க பல வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் கோலடிக்காமல் வீணடித்தனர்.இறுதியில் வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி சூட்டில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியைத் வீழ்த்தி நான்காவது முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்டது.இந்தத் தொடரில் தலா 6 கோல்கள் அடித்த ஹரிஸ்டோ ஸ்டோய்ச்கோவ்(பல்கேரியா) மற்றும் சாலென்கோ (ரஷ்யா) ஆகிய வீரர்களுக்குத் தங்க காலணி விருது வழங்கப்பட்டது.பிரேசில் வீரர் ரோமரியோவுக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.