சென்னை,

குரூப் 1 தேர்வுஎழுதுவோருக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, டி.என்.பி.எஸ்.சி  எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பை விதிஎண் 110ன் கீழ் அறிவித்தார்.
டி.எஸ்.பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள், டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி, பிசி, எம்பிசி, மற்றும் டிஎன்சி  பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 35லிருந்து 37ஆக உயர்த்தப்படுகிறது. இதர பிரிவினருக்கான வயது உச்ச வரமபு 30ல் இருந்து 32ஆக உயர்த்தப்படுகிறது.  இந்த மாற்றம் குரூப் 1, 1ஏ, 1பி தேர்வை எழுதுவோருக்கு பொருந்தும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.