ஜஜால்:
இந்துத்துவா பேர்வழியான கும்மணம் ராஜசேகரன், ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு, மிசோரம் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கும்மணம் ராஜசேகரன் மிசோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரனை, மிசோரம் மாநில ஆளுநராக நியமித்து மோடி அரசு அண்மையில் உத்தரவிட்டது. மிசோரம் மாநில ஆளுநராக இருந்த ஏற்கெனவே இருந்து வந்த சிர்பே ஷர்மாவின் பதவிக் காலம், கும்மணத்தை மிசோரத்திற்கு அனுப்பியது.
மிசோரம், கிறிஸ்தவ மக்கள் நிறைந்த மாநிலம் என்ற நிலையில், அங்கு சங்-பரிவாரங்கள் நீண்டகாலமாகவே பல்வேறு குழப்பங்களை விளைவித்து வருகின்றன; இந்நிலையில், 2018 இறுதியில், மிசோரம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், கும்மணம் ராஜசேகரன் ஆளுநராக இருந்தால், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணக்குப் போட்டு பாஜக இந்த வேலையைச் செய்தது.

இந்நிலையில், கும்மணம் ராஜசேகரன் நியமனத்திற்கு மிசோரம் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, மிசோரம் மக்கள் அடையாள பிரதித்துவக் கட்சியானது, கும்மணம் ராஜசேகரன் மிசோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறி வருகிறது.‘கும்மணம் ராஜசேகரன் மதச்சார்பின்மைக்கு எதிரானவர்; ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டவர்; திருவனந்தபுரத்தில் அமெரிக்க போதகர் ஜோசப் கூப்பர் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியும் கூட. இவர் 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ போதகர்களைத் திட்டமிட்டு நாட்டை விட்டு வெளியேற்றியவரும் ஆவார். அப்படிப்பட்ட கும்மணம் ராஜசேகரன் மிசோரம் மாநிலத்துக்குத் தேவையில்லை’ என்று கடுமையான அறிக்கை ஒன்றையும் அந்த கட்சி வெளியிட்டுள்ளது.கும்மணம் ராஜசேகரனை ஆளுநராக ஏற்கக் கூடாது என்று பல்வேறு அமைப்புகளின் ஆதரவையும் இந்தக் கட்சி திரட்டி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: