சேலம்,
அஞ்சல் ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது.

கமலேஷ் சந்திரா அறிக்கையினை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் மே 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சேலம் மாவட்ட செயலாளர் நேதாஜி,முன்னாள் மாநில தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்திடம் மனு அளிக்கப்பட்டது.இந்த மனுவினை அளிக்கையில் என்எப்பிஇ அஞ்சல் தலைவர் சி.பி.நாராயணன், செயலாளர் சி.ரவீந்திரன், நிதி செயலாளர் எஸ்.சரவணன், கிராம புற அஞ்சலக செயலர் ராமு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: