சின்னாளப்பட்டி:
வேலூரைச் சேர்ந்த ராஜசேகர் மகன் வெங்கடேஷ்(28). இவர், செங்கல்பட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர், தனது நண்பர் தினேசை பார்க்க திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு வந்தார். அங்கு நடைபெற்ற கோவில் விழாவில் பங்கேற்றார்.

பின்னர் சம்பவத்தன்று ஊருக்கு திரும்புவதற்காக கொடைரோடு ரயில் நிலையத்தில் பாண்டியன் விரைவு வண்டி மூலம் விழுப்புரத்திற்கு செல்ல ரயில் நிலைய 3-வது பிளாட்பார்மை கடக்க முயன்றார். அப்போது சென்னை- மதுரை நோக்கி வந்த வைகை விரைவு வண்டி மோதி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: