பட்டியலின மக்கள் மீது கொலைவெறி தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நேரில் சந்தித்து சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வந்து, தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சூறையாடியுள்ளார்கள். மேலும் 8 பேருக்கு அறிவாள் வெட்டு ஏற்பட்டது.

இதில், ஆறுமுகம்(65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சண்முகநாதன் (39) என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 6 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

மேலும் சம்பந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.இந்தனை தொடர்ந்து பாதிப்புக்குள்ளான கச்சநத்தம் பகுதி மக்களை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நேரில் சந்தித்து சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நடந்த சம்பத்தை கேட்டறிந்தார்.  மேலும் அவருடன் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் விஜயராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் கணேசன், சிவகங்கை மாவட்ட நிர்வாகி ஆர்.வீரைய்யா, அய்யம்பாண்டி, கே.பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.