திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் சங்கிலியாங்கொடையில் மதுரை வீரன்சாமி கோவில் விழா நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்திருந்தனர்.

விழாவில் சாமி ஊர்வலத்தின் போது வெடிகள் வெடிக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட விபத்தில் பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்த கணேசன்(50), கோணப்பட்டி செல்வராஜ்(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் செல்லத்துரை(45), திவ்யா(5), காவியஅரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: