கோவை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் அரசியல் – ஸ்தாபன முடிவுகள் விளக்க சிறப்பு பேரவை கூட்டங்கள் கோவை மற்றும் சேலத்தில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாடு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் அரசியல் ஸ்தாபன முடிவுகள் குறித்த சிறப்பு பேரவை கூட்டம் வியாழனன்று கோவையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மத்திய குழுஉறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். மாநிலசெயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் நிறைவுரையாற்றினார். இந்த பேரவைக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம்:
சேலம் விபிசி நினைவகத்திலுள்ள எம்.சீரங்கன் நினைவரங்கத்தில் வியாழனன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநில குழு உறுப்பினர் அ.பாக்கியம் ஆகியோர் விளக் உரையாற்றினர். இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.