நாமக்கல்,
கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி நாமக்கல்லில் அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வியாழனன்று நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள குளக்கரை திடலில் அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு அஞ்சல் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் வி.ஈஸ்வரன், ஆர்.ஏ துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். அஞ்சல் ஊழியர் ஓய்வூதியர் சங்க நிர்வாகி சி.ரங்கசாமி துவக்கி வைத்து பேசினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.