திருப்பூர்,
திருப்பூர் ஊராட்சி பொங்குபாளையம் ஊராட்சியில் தனியார் உணவக கழிவுநீர் ஓடையில் கலப்பதால் விவசாயம் பெருமளவில் பாதிக்கபடுகின்றது.

திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சி பகுதியில் ஸ்ரீ சாய் கிருஷ்ணா உணவகம் பெருமாநல்லூர் புறவழிச் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் கழிவுநீர், உணவகத்திற்கென்று தனியான கட்டப்பட்ட பிரதான வாய்க்கால் மூலம் பொங்குபாளையம், பரமசிவம்பாளையம் போன்ற வழியாக நல்லாறுக்கு செல்லும் ஓடையில் விடப்படுகின்றது. மேலும், மழை காலங்களில் ஓடையில் வரும் தண்ணீர் மூலம் சுமார் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், ஓடையில் கழிவு நீர் வருவதால் விவசாயம் பாழ்படுகிறது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரும், பொங்குபாளையம் முன்னாள் தலைவருமான அப்புசாமி கூறியதாவது;இந்த ஓடையில் கழிவுநீர் கலந்து வருவதால் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடுமையான துர்நாற்றமும் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் விவசாயப் பகுதியான பரமசிவம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு நீராதரமாக விளங்குகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது; ஊராட்சி செயலாளரிடம் இது சம்பந்தமாக கூறி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும், அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். எனவே, அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: