கோவை,
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வீரகேரளம், வடவள்ளி பகுதிகளில் குடிநீர், சாலை, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள், குதிரை போன்ற கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

கோவை வீரகேரளம் பகுதியில் துவங்கிய இப்பிரச்சார இயக்கத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் தொண்டாமுத்தூர் ஒன்றியக்குழு செயலாளர் ஆறுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.மணி, காளப்பன், வடவள்ளி கிளை செயலாளர் முருகேசன், வீரகேரளம் கிளை செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: