உடுமலை,
மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து உடுமலை ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமியின் பயிற்சியாளர்கள் கூறியதாவது: தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் அங்கீகாரம் பெற்ற, திருவள்ளூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டி மே-25,26,27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இதில், 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் சி.என்.நித்தின் ஆதித்யா(10), எம்.தர்ஷன்(11), என்.நயணதீட்ஷா(8), எஸ்.அஸ்வத்(10), எம்.ஜீவா(10), என்.ஸ்ரீமகிமா(10), எஸ்.தேவா(10), டி.ஜே.அஜய் கவுதமா(9) உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் நாள் தொடக்க நிலை போட்டியில் 10-12 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில், உடுமலை சீனிவாசா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.தர்ஷன் 100 மீட்டர் போட்டியில் வெண்கலமும், 300 மீட்டர் போட்டியில் தங்கம் வென்றார். இதே பள்ளி மாணவன் என்.ஜீவா 3-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும், 8-10 வயதுக்குட்பட்டோருக்கானபிரிவில் ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3-ம் வகுப்பு மாணவி என்.நயணதீட்சா முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். அனுகிரஹா இண்டர்நேசனல் பள்ளி மாணவர் எஸ் .அஸ்வத் 100 மீட்டர் பிரிவில் 3-ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். மொத்தம் 2 தங்கம், 2 வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் மாநில தலைவர் சி.கஸ்தூரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.