கோவை,
இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவது வெள்ளி விழா மாநில மாநாட்டை கோவையில் வெற்றிகரமாக நடத்துவது என வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில் தலைவர்கள் சூளுரைத்தனர்.படிப்போம் போராடுவோம் என்ற முழக்கத்துடன் இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவதுவெள்ளி விழா மாநில மாநாடு கோவையில் ஆகஸ்டு 17 ஆம் தேதி துவங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டை வெற்றிகரமாக்குவதற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் செவ்வாயன்று கோவை கணபதி சிஐடியு இன்ஜினியரிங் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுஉறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மேலும், மாணவர் சங்க முன்னாள் மாநில தலைவரும், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினருமான செல்வசிங், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மாரியப்பன், செயலாளர் உச்சிமாகாளி, சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதைத்தொடர்ந்து மாணவர் சங்க வெள்ளிவிழா மாநில மாநாட்டு வரவேற்புக்குழுவின் தலைவராக பி.ஆர்.நடராஜன், செயலாளராக கேப்டன் பிரபாகரன், பொருளாளராக கே.எஸ்.கனகராஜ் மற்றும் 145 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: