தினமும் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் அதன் மீதான மாநில வரி உயர்வை வசூலிப்பதில்லை என கேரள அரசு முடிவு செய்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட மத்திய அரசு வழிவகுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக கேரள அரசின் குறிப்படத்தக்க நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

கேரள அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவு ஜுன் முதல் தேதியிலிருந்து அமலாக உள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலை ஒட்டி 18 நாட்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்தின எண்ணெய் நிறுவனங்கள். ஆனால் அதன் பிறகு கடுமையான விலை உயர்வின் மூலம் ரூ.80ஐ தாண்டியுள்ளது. இதற்கு தீர்வுகாண கேரளா அரசின் முன்மாதிரியை பிரதமர் மோடி அவசியம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

குறைந்தபட்சம் 2014ம் ஆண்டுக்கு முன்பு இருந்த அளவிற்கேனும் கலால் வரிகளை குறைக்க வேண்டும் அதற்கு பின்பு ஒன்பது முறை உயர்த்தப்பட்ட வரியானது உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும்.கேரள அரசு பெட்ரோல் – டீசல் மீதான வரி உயர்வை வசூலிப்பது இல்லை என்று எடுத்துள்ள முடிவைப் போல பாஜக ஆளும் மாநிலங்களில் முடிவெடுத்து அறிவிக்கவும், அமல்படுத்தவும் தயாரா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம்.

Leave A Reply

%d bloggers like this: