சேலத்தில் உள்ள பிரபல போத்தீஸ் துணிக்கடைக்கு எதிரே உள்ள பிரம்மாண்ட மரம் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

போத்தீஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மே மாதங்களில் பசுமையை போற்றும் வகையில் பசுமை கொண்டாட்டம் என்ற பெயரில் மரக்கன்றுகளை வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிய மதிப்பிற்கு ஏற்ப பல வகையான மரக்கன்றுகளை வழங்கும் போத்தீஸ் சில மரக்கன்றுகளை இலவசமாகவும் வழங்குகிறது.

இந்நிலையில் சேலம் மாநகரில் உள்ள போத்தீஸ் கடைக்கு முன்பாக பிரம்மாண்ட மரம் ஒன்று இருந்தது. இந்த மரம் போத்தீஸ் கடையின் தோற்றத்தை மறைப்பதாக எண்ணி நிர்வாகம், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தியுள்ளது. பிரம்மாண்டமாக நின்றிருந்த மரம் தற்போது அனைத்து கிளைகளும் வெட்டப்பட்ட நிலையில் பரிதாபமாக காட்சி இருந்ததையும், மரங்களை வெட்டிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியதால் விளைவாக கொதித்து எழுந்த பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக அனைப்பினரும் போத்தீஸ் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போத்தீஸ் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு மாவட்ட நிர்வாகமும் உடந்தையாக இருப்பதால் தான் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: