தீக்கதிர்

நிபா வைரஸ், தடுப்பது எப்படி?

நிபா வைரஸ் என்பது இது, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நோயை விளைவிப்பதற்கு காரணமான ஒரு பாரா மைக்ஸோ வைரஸ் நோய்க்கிருமியாகும். 1998-99 ஆம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப் பூரில் இத்தொற்று பரவியபோது இது முதன்முறையாக அடையாளம் காணப் பட்டது. இத்தொற்று நோய் தொடங்கிய கிராமத்தின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது.

நோய் பரவலை எப்படி தடுக்க முடியும்?

தொற்று பாதிப்புள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். சமைக் காத உணவுப்பொருட்களை உட்கொள்வதை தவிர்க்கவும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு மட்டுமே சாப்பிடவும்.பழங்களை பாதுகாப்பாக நான் உட்கொள்ளலாமா?ஆரஞ்சு மற்றும் வாழைப்பழங்கள் போன்ற பழங்கள் அவைகளை பாதுகாப்பாக வைக்கிற உறுதியான தோல்களைக் கொண்டிருக்கின்றன. ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சு பழங்களை பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தப்படுத்திய பிறகு உட்கொள்ளலாம். பொதுவாக, சேதமடைந்துள்ள அல்லது ஓட்டை விழுந்துள்ள கடிக்கப்பட்டுள்ள பழங்களை ஒருபோதும் உண்ணக்கூடாது என்கிறார் சென்னை பெரும் பாக்கம் கிளென்ஈகில்ஸ் குளோபல் மருத்துவமனையின் முதுநிலை சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.

இது எவ்வாறு பரவுகிறது?

பழந்தின்னி வவ்வால்களில் இது காணப்படுகிறது மற்றும் பரப்பப்படுகிறது. நோய் தொற்று உள்ள வவ்வால்களின் கழிவு வெளியேற்றங்களினால் அல்லது திரவ வெளியேற்றங்களினால் மாசுபடுகிற உணவு அல்லது நீரை உட்கொள்கிற மனிதர் கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் ஆபத் தைக் கொண்டிருக்கின்றனர். வவ்வால்களின் கழிவு வெளியேற்றத் தால் மாசுபடுத் தப்பட்ட மர சாற்றை உட் கொண்டதன் காரணமாக பங்கலாதேஷில் இந்நோய் பரவலாக பரவியது. ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு நோய் பரவியிருப்பதும் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.இந்த வைரஸ்-ல் நோய் வளரும் காலஅளவு எவ்வளவு?சுமார் 5-14 நாட்கள்.

இந்நோயின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், தலைவலி, தூக்க கலக்கம், உணர்விழப்பு மற்றும் பிதற்றல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். 3 முதல் 14 நாட்களுக்குள் நிகழம். இது வளர்ச்சியடைந்து 24 முதல் 48 மணிநேரத்தில் நினைவிழப்பு நிலைக்கு சென்று கோமாவில் கொண்டுபோய் விடக்கூடும். இது எவ்வளவு ஆபத்தானது? இதற்கு முன்பு நிகழ்ந்த தொற்று பரவல் களின் ஒட்டுமொத்த நேர்வுகளின் அடிப்படையில் இந்நோய் பாதிப்பில் உயிரிழப்பு விகிதமானது 40 முதல் 75விழுக்காடு ஆகும்.இதற்கு தடுப்பூசி மருந்து இருக்கிறதா? மனிதர்களுக்கான தடுப்பூசி மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. பிறவினை (பாசிவ்) நோய் எதிர்ப்பு புரதம் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை என்றும் மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் கூறினார்.