திருவாரூர்:
திருவாரூரில் கடந்த 28ஆம் தேதி திங்கட்கிழமையன்று பேரெழுச்சியோடு துவங்கிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 9-வது மாநாடு இன்று (மே-30) மாபெரும் பேரணி – பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றது.பிரதிநிதிகள் மாநாட்டை வாழ்த்தி இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) மாநிலத்தலைவர் அ.சவுந்தரராஜன் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். வரவேற்பக்குழுத்தலைவர் ஐ.வி.நாகராஜன் எழுதிய “லஞ்ச ஊழல்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. மாநாட்டை நிறைவுசெய்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு உரையாற்றினார். வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.குமாரராஜா நன்றி கூறினார். மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த தோழர்கள் மாநாட்டில் தலைவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் 81 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலத் தலைவராக ஏ.லாசர், பொதுச்செயலாளராக வீ.அமிர்தலிங்கம், பொருளாளராக எஸ்.சங்கர், துணைத்தலைவர்களாக சி.துரைசாமி, மலைவிளைபாசி, ஏட்டி. கோதண்டம், பி.வசந்தாமணி, பி.சுப்ரமணியன், ஜி.ஸ்டாலின், செயலாளர்களாக கே.பக்கிரிசாமி, ஏ.பழனிச்சாமி, ஜி.கணபதி, ஏ.வி.அண்ணாமலை, எஸ்.பூங்கோதை, எம்.சின்னதுரை, எம்.முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பேரணி
மாநாட்டையொட்டி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி இரயில் நிலைய சந்திப்பிலிருந்து புறப்பட்டு “வெண்மணி தியாகிகள் 50ஆம் ஆண்டு நினைவு தின திடலில்” (தெற்குவீதி) நிறைவு பெற்றது. பொதுக்கூட்டத்தில் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் தோழர் மாணிக்சர்க்கார் மற்றும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் உரையாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.