திருப்பூர்,
திருப்பூரில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரி வேலை நிறுத்ததால் ரூ.1,000 பண பரிவர்தனை பாதிக்கப்பட்டது.

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் 11 வது ஊதிய குழுவின் பரிந்துரை செயல் படுத்தாமல் மத்திய அரசு உள்ளது. மேலும், 6 மாதங்களை கடந்து விட்டது. இந்நிலையில் மத்திய அரசு வங்கி ஊழியர்கள் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவராமல் அவமானப்படுத்தும் விதமாக 2 சதவிகிதஊதிய உயர்வு மட்டும் தான் தர முடியும் என்று கூறுகின்றனர்.

வங்கிகள் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமாக ஈட்டிக்கொடுக்கின்றனர். மத்திய அரசு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வாரக்கடனை காரணம் காட்டி மறுக்கிறது. இக்கோரிக்கையை முன்வைத்து அனைத்து வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் திருப்பூரில் உள்ள 372 கிளைகளில் பணியாற்றும் 3,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி பண பரிவத்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: