கோவை,
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியிட மாறுதலில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் பேராசிரியர்களுக்கான பணியிடமாறுதல் நடந்தது. இதில் பேராசிரியர்களுக்கு தாங்கள் விரும்பிய ஊர்களுக்கு பணியிடமாறுதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவை சேர்ந்த  20க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்திற்கு பதிலாக வேறு இடத்திற்கு பணியிடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழக நிர்வாகம் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் இடையே ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பிற பிரிவினரை போல் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும், அவர்கள் கேட்ட இடத்தில் பணியிடமாறுதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதனன்று பேராசிரியர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் அலுவலகம் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக எஸ்.சி.,எஸ்.டி., ஊழியர் நலச்சங்கத்தின் தலைவர் சரவணகுமார் கூறுகையில், வேளாண் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த பணியிட மாறுதலில் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு அவர்கள் கேட்ட இடத்தில் பணியிட மாறுதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக பதிவாளரிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர் முறையான பதில் அளிக்கவில்லை. இதேபோல், இடமாற்றம் செய்யும்போதும் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் எப்போதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, பிற பிரிவினர் போலஎஸ்.சி.,எஸ்.டி பிரிவினர் கேட்ட இடத்தில் பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.