கோவை,
முறைசார தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை உடனே வழங்க வலியுறுத்தி கோவையில் நலவாரிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

கட்டிட கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து அறுபது வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வழங்குவது போன்ற தொழிலாளர்களின் கேட்பு மனுக்கள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி செவ்வாயன்று கோவை இராமநாதபுரம் நலவாரிய அலுவலகத்தை ஏஐடியுசி சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் என்.செல்வராஜ் உள்ளிட்டோருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை டத்தினர். இதில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: