திருப்பூர்,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ காப்பீடு வழங்க கோரி புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா நடைபெற்றது.

ஜீலை மாதம் முதல் புதுப்பிக்கபட வேண்டிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் இடர்பாடுகளை களைந்து நிபந்ததனைகளற்ற முழுமையான இலவச மருத்துவ காப்பீட்டை செயல்படுத்த வேண்டும். மேலும், நிலுவையிலுள்ள 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணாவிற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மகுடேஸ்வரன் வரவேற்றார். முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். இதில் மாநகர மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்கள். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: