====எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்====                                                                                                                                               புதிய புதிய செயல்பாடுகளையும், வசதிகளையும் வழங்கிவரும் வாட்ஸ்அப் செயலியில் எளிதாகவும் சிறப்பாகவும் செயல்படுவதற்கு வழிகள் பல கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பலவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம். சிலர் அறியாமலும் இருக்கலாம். புதிய வசதிகளைப் பயன்படுத்த விரும்புவோர் உங்கள் போனில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்திருக்கிறீர்களா என்பதை கூகுள் பிளே ஸ்டோரில் முதலில் சரிபார்த்துக் கொண்டு பயன்படுத்திப் பாருங்கள்.

குரூப்பிலிருந்து தற்காலிகமாக விலகுதல்
பல குரூப்களில் இணைந்திருப்பவர்கள் சிறிது காலம் ஒரு சில குரூப் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைத்தால் குரூப்பை விட்டு விலகாமல் தற்காலிகமாக 8 மணி நேரம் முதல் 1 வருடம் வரை குறிப்பிட்ட காலத்தை தேர்வு செய்து நிறுத்தி வைக்கலாம். இக்காலங்களில் வரும் சேட் மெசேஜ்களை நீங்கள் படித்தது போல டிக் செய்து காட்டும்.இதனை செயல்படுத்த நிறுத்த விரும்பும் குரூப்பில் நுழைந்து குருப் செட்டிங் செல்லவும். அதில் அறிவிப்புகளை முடக்கவும் (Mute Notifications) என்பதைத் தேர்வு செய்து அதில் 8 மணி நேரம், 1 வாரம், 1 வருடம் என்பதில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.

உங்கள் மெசேஜ் படிக்கப்பட்டதை அறிய
தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்பும் தகவல்கள் படிக்கப்பட்டதை அறிய இரண்டு நீல நிற டிக் மார்க் அடையாளங்கள் காட்டப்படும். அதுவே குரூப்பில் உள்ளவர்களில் யார் யாரெல்லாம் நம்முடைய தகவலைப் படித்தனர் என்பதை அறியவும் ஒரு வழி உள்ளது. இதற்கு நீங்கள் பகிர்ந்து தகவலைத் தேர்வு செய்துவிட்டு குரூப் மெனுவைக் கிளிக் செய்யவும். அதில் விபரம் (Info) என்பதைக் கிளிக் செய்தால் நம்முடைய தகவலைப் படித்தவர்கள் இரண்டு நீல நிற டிக் அடையாளத்திற்கு கீழே பட்டியலிட்டுக் காட்டப்படுவர்புதிய எண்களுக்கும் செய்தி அனுப்பலாம்
வாட்ஸ் அப்பில் ஒரு எண்னை சேவ் செய்திருந்தால் மட்டுமே அந்த எண்ணுக்கு மெசேஜ் செய்ய முடியும் எனும் நிலை இருந்துவந்தது. தற்போது சேவ் செய்யப்படாத எண்ணுக்கும் மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகமாகியுள்ளது.

செய்தியைத் திரும்பப் பெறுதல்
தவறுதலாகப் பகிரப்பட்ட செய்தியை உடனடியாக திரும்பப் பெறும் வசதி வாட்ஸ்அப்பில் சில மாதங்களுக்கு முன் அறிமுகமானது. இந்த வசதியை செயல்படுத்துவதற்கான நேரம் 10 நிமிடத்திலிருந்து 1 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் தேர்வு செய்ய
செய்தி மற்றும் உரையாடலில் ஒவ்வொரு மெசேஜாக டிக் செய்து நீக்கும் வசதியில் கூடுதலாக செலக்ட் ஆல் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே க்ளிக்கில் அனைத்தையும் செலக்ட் செய்வது சாத்தியமாகியுள்ளது.

குறைவான டேட்டா பயன்பாடு
சேட்டிங் மற்றும் கால்களின் போது குறைவான டேட்டாவை மட்டுமே பயன்படுத்தும்படியாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

விருப்பத்திற்கேற்ப அறிவிப்புகள்
தற்போது வந்துள்ள முக்கியமான மற்றொரு வசதி இது. போன் திரை லாக் செய்யப்பட்டு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நிலையில் வரும் வாட்ஸ்அப் சேட் அறிவிப்புகள் (Customise notifications) திரையின் மேலே பாப்அப்பாக தோன்றும்படி காட்டச் செய்யலாம். அந்நிலையிலேயே நேரடியாக கிளிக் செய்து பதிலும் அனுப்பலாம்.இதனை செயல்படுத்த செட்டிங்ஸ் கிளிக் செய்து அதில் Settings -> Notifications சென்று Popup Notifications என்பதில் முதலாவதாக உள்ள பாப்அப் வேண்டாம் இரண்டாவதாக ஸ்கிரீன் ஆனில் இருக்கும்போது, மூன்றாவதாக ஸ்கிரீன் ஆஃப்ல் இருக்கும்போது, அனைத்து நேரத்திலும் காட்டு என நான்கு தேர்வுகள் காட்டப்படும். அதில் நம் விருப்பத்தை தேர்வு செய்து கொடுக்கலாம்.

ஃபேஸ்புக் தகவல் பகிர
ஃபேஸ்புக் பயனாளர்கள் அதிலுள்ள தகவல்களை, வாட்ஸ் அப்பில் பகிர வந்துள்ள வசதி. ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிலிருந்து Send to Whatsapp என்ற கொடுப்பதன் மூலம் நம்முடைய வாட்ஸ்அப் குரூப்பிலும் தகவலை எளிதாகப் பகிரமுடியும்.

அக்கவுண்ட் தகவல்கள்
வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் தங்களது அக்கவுண்ட் ரிப்போர்ட்களைப் பெறவும், ரிக்வெஸ்ட் செய்யவும் புதிய வசதி அறிமுகம் ஆகியுள்ளது. இதன் மூலம் 3 நாட்களுக்குள் பயனாளர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பப்படும்.

வாக்கியங்களை அழகூட்ட
தகவல்களைத் தட்டச்சு செய்யும்போது சில வார்த்தைகளை குண்டு எழுத்தாக (Bold Letter), சாய்வாக (Italics), அடித்தலுடன் (Strike-thrus) என மூன்று வகை வடிவங்களில் அமைக்கும் வசதி உள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்த தட்டச்சு செய்யும் வாக்கியத்தில் குறிப்பிட்ட வார்த்தைக்கு முன்பாகவும் பின்பாகவும் நட்சத்திரக் குறீயீடு (உதாரணமாக *Theekkathir*) இணைத்தால் போல்டாக மாறும்.அதுவே கிடைமட்டக்கோடு குறியீட்டை (உதாரணமாக : _Theekkathir_)வார்த்தைக்கு முன்னும் பின்னும் சேர்த்தால் சாய்வு (Italic) எழுத்தாக மாறும். இதுவே அடித்தது போன்ற தோற்றத்தைப் பெற டெல்ட்டா குறியீட்டை (உதாரணம் ~Theekkathir~)வார்த்தைக்கு முன்னும் பின்னும் சேர்க்கவேண்டும். 

குரூப் நபர்களை அறிய
குரூப்பில் உள்ளவர்களைக் காண குரூப் பற்றிய தகவல் பக்கத்திற்கு செல்லாமல் சேட் விண்டோவிலேயே அறிந்து கொள்ள @ என்ற குறியீட்டை தட்டச்சு செய்வதன் மூலம் பார்க்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.